அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்ற 'எச்' பிரிவு அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியில், முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணி, அறிமுக அணியான கேப் வெர்டேவுடன் மோதியது.
கேப்வெர்டே அணியின் கோல் கீப்பர் வோசின்யா அபாரமாக விளையாடி அரங்கை அதிரவைத்தார்.
இரு அணிகளும் கோல் அடிக்க போராடியபோதும், ஒரு கோல் கூட அடிக்காமல் 0-0 என்ற புள்ளிக்கணக்குடன் போட்டி டிராவில் முடிந்தது.
சியாட்டிலில் நடைபெற்ற 'ஜி' பிரிவு அணிகளுக்கு இடையேயானப் போட்டியில் பெல்ஜியம், எகிப்து அணிகள் மோதின. போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக முயற்சித்தன.
முதல் பாதி ஆட்டத்தின் முடிவில், எகிப்து அணி ஒரு கோல் அடித்து முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில், பெல்ஜியம் அணி அடுத்தடுத்து மூன்று வீரர்களை மாற்றிய நிலையில், கோல் ஒன்றை அடித்தது.
இதனால், பெல்ஜியம், எகிப்து அணிகளுக்கு இடையேயானப் போட்டி 1-1 என்ற புள்ளிக்கணக்குடன் டிராவில் முடிந்தது.
அடுத்து மியாமியில் ‘எச்’ பிரிவு அணிகளுக்கு இடையேயான போட்டியில் சவுதி அரேபியா, உருகுவே அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் சவுதி அரேபியா அணி ஒரு கோல் அடித்த நிலையில், இரண்டாம் பாதி ஆட்டத்தில் உருகுவே அணியும் ஒரு கோல் அடித்தது. இதனால், இப்போட்டி டிராவில் முடிந்தது.
அடுத்து ஈரான், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில், ஆட்டம் தொடங்கியவுடன் நியூசிலாந்து அணி கோல் அடித்து முன்னிலைப் பெற்றது. 32 ஆவது நிமிடத்தில் ஈரான் கோல் அடித்த நிலையில், முதல் பாதி ஆட்டம் டிராவில் முடிந்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடித்த நிலையில், போட்டி டிராவில் முடிந்தது.
இதனைத்தொடர்ந்து 'ஜி', ‘எச்’ பிரிவில் உள்ள அனைத்து அணிகளும் ஒரு புள்ளியுடன் இருப்பதால், அடுத்து வரும் போட்டிகள் மேலும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.