உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் ரவுண்ட் ஆப் 16 சுற்று தொடங்கி, போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் பிரான்ஸ், மொராக்கோ, இங்கிலாந்து, நார்வே அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.
இன்று, நாளை நடைபெறும் நான்கு போட்டிகள் மூலம் காலிறுதிக்குத் தகுதி பெறும் மீதமுள்ள அணிகள் உறுதி செய்யப்படும்.
மொராக்கோ, கனடா அணிகளுக்கு இடையேயான போட்டியில் மொராக்கோ அணி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கனடாவை 3-0 என்ற புள்ளிக்கணக்கில் மொராக்கோ அணி வீழ்த்தியது. இதன் மூலம் மொராக்கோ அணி, கனடாவை 3-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு போட்டியில் பிரான்ஸ், பராகுவே அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், பிரான்ஸ் அணி 1-0 என்ற புள்ளிக்கணக்கில் பராகுவேவை வீழ்த்தியதன் மூலம் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இங்கிலாந்து, மெக்சிகோ அணிகளுக்கு இடையேயான பரபரப்பான போட்டியில் இங்கிலாந்து அணி 3-2 என்ற புள்ளிக்கணக்கில் மெக்சிகோ அணியை வீழ்த்தி, காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.