விராட் கோலி, கவுதம் கம்பீர்
விராட் கோலி, கவுதம் கம்பீர்

நடுவிரலைக் காட்டிய விவகாரம்; கம்பீர் விளக்கம்!

இந்தியா- நேபாளம் போட்டியின் போது ரசிகர்களை நோக்கி நடுவிரலைக் காட்டியது தொடர்பாக கவுதம் கம்பீர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதின. இதில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 'குரூப் 4' சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்த போட்டியின் வர்ணனையாளர் குழுவில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் இடம்பெற்றிருந்தார். அவர் வர்ணனை அரங்கை விட்டு வெளியேறும் போது ரசிகர்கள் விராட் கோலி மற்றும் எம்எஸ் தோனியின் பெயர்களை கோஷமிடத் தொடங்கினர். கம்பீர் அவர்களை நோக்கி நடு விரலை காண்பிப்பது போல வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ குறித்து கவுதம் கம்பீர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், அந்த பகுதியில் பாகிஸ்தான் ரசிகர்கள் அதிகமாக இருந்தனர். அவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். காஷ்மீர் குறித்தும் கோஷம் எழுப்பினார்கள். ஒரு இந்தியனாக என் நாட்டை பற்றி யார் தவறாக பேசினாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. சோசியல் மீடியாவில் பார்ப்பதெல்லாம் முழுமையான செய்தியை சொல்லாது. அதில் வரும் கோஷங்கள் எடிட் செய்யப்பட்டவை என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com