கதறக் கதற அடித்த கில்! குதறப்பட்ட மும்பை இண்டியன்ஸ்! மீண்டும் சிஎஸ்கே – ஜிடி!

கதறக் கதற அடித்த கில்! குதறப்பட்ட மும்பை இண்டியன்ஸ்! மீண்டும் சிஎஸ்கே – ஜிடி!

திரும்பவும் குஜராத் டைட்டன்ஸுடன் மோதவேண்டாம்! எப்படியாவது மும்பை இந்தியன் அணியை செயிக்க வெச்சுடு ஆண்டவா? என சிஎஸ்கே ரசிகர்கள் வேண்டிக்கொண்டிருந்தனர். ஆனால் கடவுள் நினைத்திருந்தாலும் அந்த சுப்மான் கில் நினைக்கவில்லை.

சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வதுபோல் டாஸில் வென்றாலும் பந்துவீச்சை தேர்வு செய்தார் மும்பை அணித் தலைவர் ரோகித் சர்மா.

தொடக்கத்தில் சற்று மெதுவாக தொடங்கி விருத்திமன் சாஹா அவுட் ஆனதும் மும்பை அணி சற்று பெருமூச்சு விட்டிருக்கலாம். அதன் பின்னர் சாய் சுதர்சன் உள்ளே வர, கில் விசுவரூபம் எடுத்து அடித்த அடியில் தாரை தப்பட்டைகள் சுக்கு நூறாகின. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆகாஷ் மத்வால் பந்துவீச்சு எடுபடவில்லை!

நூறு ரன்களை எடுத்தும் கில் நிற்கவில்லை. 129 ரன்கள் எடுத்து அவர் அவுட் ஆனார். இல்லெயெனில் 250 ரன்களை கூட எடுத்திருப்பார்கள். சாய் சுதர்சனை போதும் நீ உள்ளே போ என அனுப்பிவிட்டு ஹர்திக் பாண்டியா உள்ளே கூப்பிட்டது ரஷீத்கானை. இந்த ஆப்கன் வீரர்தான் சிஎஸ்கே ஆப்பு வைக்கும் வாய்ப்பு அதிகம். எனவே தோனி சூதானமாக இருந்துகொள்ள வேண்டியது இவரிடம் தான்!

கில். 49 பந்துகளில் மூன்றாவது சதம்
கில். 49 பந்துகளில் மூன்றாவது சதம்BCCI

எங்க கிட்ட சூரியகுமார் யாதவ் இருக்காருடா… இந்த 233 இலக்கை நாங்க தட்டித் தூக்கிடுவோம் என்ற மும்பைரசிகர்களுக்கு இதற்கு முன்பே புளியைக் கரைத்தார் இஷான் கிஷான். முதல் இன்னிங்ஸிலேயே சும்மா நடந்துவந்த ஜோர்டான் மீது மோதி காயப்பட்டு உள்ளே போயிருந்தார். ஆகவே இன்று தொடக்க வீரரராக வந்தது நெஹல் வதேரா. இவரும் ரோஹித்தும் அவுட் ஆயினர். கிரீனுக்கு கையை உடைத்து உள்ளே அனுப்பிவிட்டனர். திலக் வர்மாதான் வந்து செம காட்டு காட்டினார். சூரிய குமார் யாதவ் விளையாடினார்தான். ஆனாலும் அரை சதம் அடித்தும் டிம் டேவிட் போன்ற வீரர்கள் ஆட்டமிழந்ததால் ஒன்றும் பிரயோசனமில்லாமல் போய்விட்டது! மொஹித் சர்மா தன் பிள்ளைப் பூச்சி போன்ற பந்து வீச்சால் ஐந்து விக்கெட் எடுத்துவிட்டார்.

இப்போது கப்பை நோக்கி சுப்மான் கில் என்ற எஞ்சினைக் கொண்டு நூறு கி மீ வேகத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி போய்க் கொண்டிருக்கிறது! குறுக்கே கட்டையைப் போடுவாரா தோனி?

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com