குகேஷ் - விஸ்வநாதன் ஆனந்த்
குகேஷ் - விஸ்வநாதன் ஆனந்த்

இந்தியாவின் நம்பர் -1 செஸ் வீரரானார் குகேஷ்!

இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் தமிழக வீரர் குகேஷ் நம்பர் 1 செஸ் வீரராக முன்னேறியுள்ளார்.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பாக ஒவ்வொரு மாதமும் அதிகாரப்பூர்வ தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இந்த தரவரிசைப் பட்டியலில் கடந்த 37 ஆண்டுகளாக விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவின் நம்பர் 1 வீரராக இருந்தார்.

இந்த நிலையில் இன்று சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் தமிழக வீரர் குகேஷ் இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக முன்னேறியுள்ளார்.

அதேபோல், 2,758 புள்ளிகளுடன் சர்வதேச அளவில் 8-வது இடத்திற்கு குகேஷ் முன்னேறியுள்ளார். விஸ்வநாதன் ஆனந்த் 2,754 புள்ளிகளுடன் சர்வதேச பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளார்.

உலகக்கோப்பை செஸ் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா சர்வதேச தரவரிசை பட்டியலில் 19-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com