உலகத்திலேயே மிக இளம் வயதில் சதுரங்கப் போட்டியின் சாம்பியன் பட்டம் வென்ற பெருமையை தமிழகத்தின் குகேஷ் பெற்றுள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் சீன நாட்டின் டிங் லிரனைத் தோற்கடித்து அவர் இப்பட்டத்தை வென்றார்.
தன் 18 வயதில் இச்சாதனையை நிகழ்த்திய குகேஸ், 14 சுற்றுகளிலும் பெரும்பாலும் சமனிலையிலேயே இருந்துவந்தார். ஆட்டத்தின் கடைசிச் சுற்றில் லிரன் 6.5 புள்ளிகளுடன் இருக்க, இவர் 7.5 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டினார்.
இந்த ஆண்டு உலக சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் மிகவும் இளைய போட்டியாளராக குகேஷ் களமிறங்கினார்.
இவருக்கு முன்னர் 22 வயதில் ரசியாவின் காரி காஸ்பரோவ் இளம் வயதில் உலக சாம்பியனாக ஆனார். அவர் அனட்டாலி காஸ்பரோவை 1985இல் வென்றார்.
இதே வேளை, இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். கடைசியாக 2013இல் அவர் உலக செஸ் சாம்பியன் பட்டத்தைப் பெற்றிருந்தார். இரண்டாவது இந்தியராக குகேஷ் அந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.