குல்வீர்சிங் அபாரம்... காமன்வெல்த் 10,000 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி!

Gulveer Singh
குல்வீர் சிங்
Published on

காமன்வெல்த் 10,000 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க, இந்தியா சார்பில் 78 வீரர்கள், 48 வீராங்கனைகள், 65 அலுவலர்கள் உட்பட்ட 191 பேர் கொண்ட குழு பங்கேற்கிறது.

காமன்வெல்த் 10,000 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய தடகள வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர், 2010ஆம் ஆண்டு பெண்கள் பிரிவில் கவிதா ராவத் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

இந்தப் போட்டியில், 27 நிமிடங்கள் 48.93 வினாடிகளில் இலக்கைக் கடந்து முதலிடத்தைப் பிடித்தார் ஆஸ்திரேலிய வீரர் கை ராபின்சன்.

இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் குல்வீர் சிங் 27 நிமிடங்கள் 49.78 வினாடிகளில் இலக்கை அடைந்துள்ளார்.

மேன் தீவைச் சேர்ந்த டேவிட் முல்லார்கி மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

கனமழை பெய்ததால் இந்த மைதானத்தின் ஓடுகளம், வீரர்கள் ஓடுவதற்கு கடுமையாக ஆனது.

மொத்தம் 25 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில், ஆரம்பத்தில் பின்தங்கி இருந்தாலும், கடைசிச் சுற்றில் 3ஆவது இடத்திலிருந்து 2ஆவது இடத்திற்கு முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை வென்று குல்வீர் சிங் சாதனை படைத்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com