அதிவேக இரட்டை சதம் அடித்தும் தோற்ற இங்கிலாந்து! இலங்கை அணியின் மரண சேஸ்!

வெற்றிபெற்ற இலங்கை அணி
வெற்றிபெற்ற இலங்கை அணி
Published on: 

இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணியின் கேப்டன் ஹாலி ப்ரூக், மிகுந்த அதிர்ச்சிக்குள்ளான மனிதர் ஆகிவிட்டார். இருக்காதா பின்னே? 114 பந்துகளில் 200 ரன்கள் குவித்து உலகசாதனை நிகழ்த்திய பின்னரும் தன் அணி தோற்றுப்போனால் அதிர்ச்சி அடையத்தானே செய்வார்?

 நேற்று ராவல்பிண்டியில் நடந்த முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து இலங்கையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் குசல் மெண்டிஸ், ஆட்டத்தின் மறுபாதியில் எப்படியும் பனி அதிகமாக இருக்கும் எனக் கணித்து பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இலங்கை அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இங்கிலாந்து பயங்கரமாக ஆடி 429 ரன்களைக் குவித்துவிட்டது! அதில் 116 பந்துகளை சந்தித்து 202 ரன்களை குவித்த ஹாலிப்ரூக்கின் சாதனையும் அடங்கும். ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீரர், அதிவேக இரட்டை சதம் என்று இரு சாதனைகள்!

இலங்கை அணி இந்த இலக்கைத் துரத்தியபோது இரண்டு விக்கெட்டுகளை விரைவில் இழந்து 24 ரன்கள் என மோசமாகத் தொடங்கியது. ஆனால் பவன் ரத்னநாயகே 130, அவிஷ்கா பெர்னாண்டோ, தாசுன் ஷனகா ஆகியோரின் தலா 97 ஆகிய ரன்களால் சமாளித்தது. கடைசியில் ஏழாவது ஆட்டக்காரராக களமிறங்கிய ஜனித் லியாங்கே, 27 பந்துகளில் 61 ரன்கள் அடித்து இலங்கையை வெற்றி பெறவும் வைத்தார். கடைசி இரு பந்துகளில் ஆறு ரன்கள் தேவை; எட்டு விக்கெட் போய்விட்டது. அந்நிலையில் இறுதிப்பந்துக்கு முந்தைய பந்தை ஜனித் ஆறு ரன்களுக்குப் பறக்க விட்டு இலங்கை ரசிகர்களுக்கு மாபெரும் பரிசாக இந்த வெற்றிக் கனியைப் பறித்தார்!

இது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இரண்டாவது வெற்றிகரமான சேஸ் ஆகும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com