5 ஆட்டங்கள் ஆடியும் ஒரு விக்கெட் கூட எடுக்கல… இவருக்கு என்னதான் ஆச்சு?

பும்ரா
பும்ரா
Published on

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக இருப்பவர் பும்ரா. உலக கிரிக்கெட்டில் இவரது யார்க்கர் பந்துவீச்சுக்கு அஞ்சாத வீரர்களே இல்லை. சமீபத்தில் இந்தியா டி20 கிரிக்கெட்  உலக் கோப்பையை வெல்ல இவரது பந்துவீச்சுதான் காரணமாக இருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் உறுப்பினராக தற்போது ஐபிஎல் ஆட்டங்களில் ஆடிவருகிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு 2026 ஐபிஎல்லில் ஐந்து போட்டிகளில் ஆடி உள்ளது. முதல் ஆட்டம் தவிர மீதி நான்கு ஆட்டங்களிலும் படுதோல்வி அடைந்தது. பலம் வாய்ந்த அணியான இதை எல்லா அணிகளும் ஏறி மிதித்து வருகின்றன.

இந்நிலையில் தான் அந்த அணியின் ஸ்டார் பந்து வீச்சாளரான பும்ரா, ஒரு விக்கெட் கூட இந்த ஆட்டங்களில் எடுக்க முடியாமல் இருப்பது அந்த அணி ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

என்ன காரணம்?

“பும்ரா இந்த ஐந்து ஆட்டங்களிலும் வேகம் குறைந்த பந்துகளை அதிகம் வீசி இருக்கிறார். அவர் வேகமான பந்துகளை அதிகம் வீச வேண்டும். அடிக்கடி மெது வேக பந்துகளை வீசக்கூடாது. அப்படிச் செய்தால் அவரால் விக்கெட்டுகளை வீழ்த்தமுடியும்’’ என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான் கூறி உள்ளார்.

பும்ரா ஒரு தலைசிறந்த பந்துவீச்சாளர். அவருக்குச் சொல்லத் தேவை இல்லைதான். இருந்தாலும் அடுத்தடுத்த ஆட்டங்களில் அவரது பந்துவீச்சில் விக்கெட்டுகள் விழும் என எதிர்பார்க்கலாம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com