
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி நாயகனான சஞ்சு சாம்சன் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும், அவர் பேசும் இந்தி பலரையும் வாய்பிளக்க வைக்கும். அவருக்கு இந்தி மட்டுமில்லை தமிழ், பஞ்சாபி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளும் பேசத் தெரியும்.
தற்போது, சமூக ஊடகத்தில் வைலாகியுள்ள வீடியோ ஒன்றில் தனக்கு மலையாளம், ஆங்கிலம் போலவே இந்தி, பஞ்சாபி, தமிழும் பேசத்தெரியும் என கூறியுள்ளார்
“எனக்கு இந்தி சரளமாக பேசத்தெரியும். 7-8 ஆண்டுகள் டெல்லியில் இருந்துள்ளேன். அதனால் இயல்பாகவே இந்தி பேச கற்றுக்கொண்டேன்.
பின்னர், திருவனந்தபுரத்துக்கு அருகேயுள்ள விழிஞ்சம் பகுதியில் இருந்தேன். அது கேரளா – தமிழ்நாடு எல்லைப் பகுதி என்பதால் அங்கு தமிழ் பேசும் மக்கள் அதிகம். அதனாலும், நிறைய தமிழ் திரைப்படங்கள் பார்த்ததாலும் தமிழை இயல்பாக பேசக்கற்றுக் கொண்டேன்.
இதனால் இந்தி பேசும் வீரர்களுடனும் தமிழ் பேசும் வீரர்களுடனும் நெருக்கமாக பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.” என்று கூறியுள்ளார்.
1994ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த சஞ்சு சாம்சனின் தந்தை ஒரு காவல் அதிகாரி. அவர் டெல்லியில் சில ஆண்டுகள் பணியாற்றியதால் சஞ்சு சாம்சனும் டெல்லியில் இருந்துள்ளார்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தால் பல மொழிகளையும் அவர் இயல்பாகவே கற்றுக் கொண்டுள்ளார்.