அலீம் ஹக்கிமுடன் விராட் கோலி
அலீம் ஹக்கிமுடன் விராட் கோலி

ஆத்தாடி... முடி வெட்ட ரூ.1 லட்சம் வாங்குறாராம் இவர்...!

சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் என பலருக்கும் பிடித்த ஹேர் ஸ்டைலிஸ்டாக இருப்பவர் அலீம் ஹக்கிம். ஜெயிலர் - ரஜினி, அனிமல் - ரன்பீர் கபூர், சச்சின், தோனி, விராட் கோலி ஆகியோரின் வித்தியாசமான ஹேர் ஸ்டைலை உருவாக்கிய மனிதர் இவர்தான்.

கிரிக்கெட் வீரர் விராட்டின் சமீபத்திய ஹேர் ஸ்டைலை ஹக்கிம்தான் உருவாக்கியுள்ளார். அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், “நான் ஹேர் கட்டுக்கு எவ்வளவு தொகை வாங்குகிறேன் என்பது அனைவரும் தெரியும்.” என்றவர், விராட் கோலிக்கு ஹேர் கட் செய்ய எவ்வளவு வாங்கினேன் என்பதை வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால், தன்னிடம் ஹேர் கட் செய்வதற்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வாங்குவதாக கூறினார்.

பிரபலங்களுக்கு ஹேர் ஸ்டைலிஸ்டாக இருப்பது எவ்வளவு கடினமானது என்று கூறிய ஹக்கிம், விராட் கோலியுடனான தனது அனுபவத்தை கூறுகையில், “ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட இருப்பதால் கூலான, வித்தியாசமான ஹேர் கட் பண்ணலாம் என்று முடிவெடுத்தோம். விராட் எப்போதுமே, 'இதைச் செய்து பார்க்கலாம், அடுத்து இந்த ஹேர் ஸ்டைல் வைக்கலாம்’ எனச் சொல்வார். விராட்டின் புருவத்தின் ஒரு லேசான கட் ஒன்றை வைத்தோம். சைடுகளை பேட் (Fade)செய்தோம், மேலும் அவரது தலைமுடிக்கு ஹேர் கலர் செய்து பின்பக்கத்தில் முள்ளெட் டெக்ஸ்சர் (mullet textured) ஒன்றை கொடுத்துள்ளோம்” என்ற ஹக்கிம் விராட் கோலியின் இப்போதைய ஹேர் ஸ்டைல் தனக்கு ரொம்ப பிடித்திருப்பதாக கூறினார்.

அதெல்லாம் சரி... நூறு ரூபாய் முடிவெட்டக் கேட்டாலே முனகும் மக்கள், இந்த ஒரு லட்ச ரூபாய் மேட்டர் பத்தி என்ன நினைக்கிறீங்க?

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com