வினேஷ் போகத்
வினேஷ் போகத்

அர்ஜுனா, கேல் ரத்னா விருதுகளை திருப்பி அளிக்கிறேன்! - வினேஷ் போகத்

மத்திய அரசின் அர்ஜுனா, கேல் ரத்னா விருதுகளை திருப்பியளிப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய ஆதரவளரான சஞ்சய் சிங் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சஞ்சய் சிங்கின் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாக்‌ஷி மாலிக் மல்யுத்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரரான பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதினை திருப்பியளித்தார்.

இந்த நிலையில், அர்ஜுனா மற்றும் கேல் ரத்னா விருதுகளை திருப்பியளிப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

”நான் எனது மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை திருப்பியளிக்கிறேன். இந்த நிலையை ஏற்படுத்திய எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com