ஐசிசி வெளியிட்ட தரவரிசையில் இந்திய அணி  முதலிடம்
ஐசிசி வெளியிட்ட தரவரிசையில் இந்திய அணி முதலிடம்

ஐ.சி.சி. தரவரிசை: அனைத்து வகை போட்டிகளிலும் இந்திய வீரர்கள் ஆதிக்கம்!

ஐ.சி.சி. வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில், இந்திய அணி அனைத்து வகை கிரிக்கெட் போட்டியிலும் முதலிடம் பிடித்துள்ளது.

இந்திய அணி வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகைப் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிகளைக் குவித்து வருகிறது.

இந்த நிலையில், ஐ.சி.சி. வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் அனைத்து வகை போட்டிகளிலும் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.

அதேபோல், ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் சுப்மன் கில் முதல் இடத்தில் உள்ளார்.

ஒரு நாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் முகமது சிராஜ் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார். இதேபோன்று டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர் பட்டியலில் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் முதல் இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான ஆல் ரவுண்டர் வரிசையில் நம்பர் ஒன் வீரராக ஜடேஜா இருக்கிறார். டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் சூர்யகுமார் இருக்கிறார். டி20 பந்துவீச்சாளர் பட்டியலில் மட்டும் தான் இந்திய வீரர்கள் நம்பர் ஒன் இடத்தில் இல்லை. மற்ற அனைத்துமே இந்தியாவின் ஆதிக்கமே இருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com