சி.எஸ்.கே.
சி.எஸ்.கே.

சி.எஸ்.கே.வில் தொடரும் தோனி: அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள் யார்?

2024ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ். தோனியை தக்க வைத்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எ.ல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் பி.சி.சி.ஐ.யால் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடர் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிகளில் தங்கள் அணியிலிருந்து யார் யாரை விடுவிக்கிறார்கள் என்கிற பட்டியலை அந்தந்த அணிகள் வெளியிட வேண்டும். அதன்படி, எம்.எஸ். தோனி தலைமையில் செயல்பட்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் அணி சார்பில் விடுவித்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரான்ஷு சேனாபதி, அம்பதி ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகலா ஆகிய 8 வீரர்களை சென்னை அணி விடுவித்துள்ளது. இதேபோல், மற்ற அணிகளும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மேலும், குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் ரூ.15 கோடி கொடுத்து ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com