ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 15ஆவது தங்கம்!

Parveen Hooda won gold medal
தங்கப்பதக்கம் வென்ற பர்வீன் ஹூடா
Published on: 

ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்திய வீரர்கள் அடுத்தடுத்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.

படகுப்போட்டி :

ஆடவர் ஸ்கிஃப் ஓபனிங் ரேஸ் -9இல்,  பிரின்ஸ் குரிசின்கல் நோபல், மனு ஃபிரான்சிஸ் ஆகியோா் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.

மகளிா் ஸ்கிஃப் ஓபனிங் ரேஸ் 9-இல், ஹா்ஷிதா தோமா், ஷீத்தல் வா்மா இந்திய அணி வெண்கலம் வென்றுள்ளது.

மல்யுத்தம்:

ஆடவர் 97 கிலோ எடைப் பிரிவில், இந்திய வீரர் நிதேஷ் சிவச் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

ஆடவர் 65 கிலோ எடைப் பிரிவில், இந்திய வீரர் சுஜித் கல்கல் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

வில்வித்தை:

ஆடவர் தனிநபர் பிரிவில் தமிழகத்தின் கணேஷ் மணிரத்னம் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

ஸ்குவாஷ்:

இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தலா ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளன.

கிரிக்கெட்:

ஆடவர் டி20 கிரிக்கெட் அரையிறுதியில், இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

குத்துச்சண்டை:

குத்துச்சண்டை பிரிவில் இந்திய வீராங்கனை பர்வீன் ஹூடா இந்தியாவுக்கு 13ஆவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

ஆடவர் குத்துச்சண்டையில் 80 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அங்குஷ் பங்கால் இந்தியாவுக்கு 15ஆவது தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.

பதக்கப் பட்டியலில் இந்திய அணி:

இதுவரை இந்தியா 15 தங்கம், 25 வெள்ளி, 35 வெண்கலம் என மொத்தம் 75 பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com