தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று ஜோகன்னஸ்பர்க்கில் நடந்தது. டாஸ்' வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தென்னாப்பிரிக்க அணிக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க, ரீசா ஹென்டிரிக்ஸ் (0), வான் டெர் துசென் (0), டோனி டி ஜோர்ஜி (28), கிளாசன் (6) ஆகியோர் அவுட்டாகினர். அவேஷ் கான் பந்துவீச்சில் கேப்டன் மார்க்ரம் (12), டேவிட் மில்லர் (2), வியான் முல்டர் (0), கேஷவ் மஹாராஜ் (4) ஆகியோர் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.

இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 27.3 ஓவரில் 116 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5, அவேஷ் கான் 4 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து, இந்திய அணி களமிறங்கியது. ருதுராஜ் ரன்னில் 5 ரன்னில் வெளியேறினார். பின்னர், ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன், ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு 88 ரன் சேர்த்த போது ஸ்ரேயாஸ் (52) அவுட்டானார். இந்திய அணி 16.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 117 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சுதர்சன் (55), திலக் வர்மா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி டிசம்பர் 19ஆம் தேதி நடக்கிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com