பும்ரா
பும்ரா

உலக கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு ஏன் பும்ரா வேண்டும்?

இந்திய உலக கோப்பை அணியில், முழு உடல் தகுதியுடன் பும்ரா இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா கடந்த செப்டம்பர் முதல் எந்த போட்டிகளிலும் விளையாட வில்லை. இதனால், இருபது ஓவர் உலகக் கோப்பை, ஆசிய கோப்பை போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் உருவானது.

பும்ரா, கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தில் முதுவலி தொடர்பான அறுவை சிகிச்சை செய்துக் கொண்டார். அவர் முழு உடற்தகுதியுடன் இருப்பது உறுதியான நிலையில், ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள அயர்லாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா அறிவிக்கப்பட்டுள்ளார். ஏறக்குறை ஓராண்டுகள் கழித்து தனது ஆட்டத்தை தொடங்க உள்ளார் பும்ரா.

“பும்ரா மீண்டும் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கியுள்ளார். அவர் எந்தளவிற்கு உடல் தகுதியுடன் இருக்கிறார் என்பது பார்ப்போம். சொந்த மண்ணில் நடக்கும் உலக கோப்பையில் விளையாட முழு உடல் தகுதியுள்ள பும்ரா தேவை. பும்ரா விளையாட வில்லை என்றால், ஆசிய கோப்பை, இருபது ஓவர் உலகக் கோப்பையில் தோற்றது போன்று தோற்போம்.

உலக கோப்பை அணியில் கே.எல். ராகுல், ரிஷப் பண்ட்டு, ஐயர் போன்றவர்களின் பெயர்களை காணவில்லை. பும்ரா இருப்பது நம்பிக்கை அளிக்கிறது” என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com