விளையாட்டு
4ஆவது வெண்கலம்- ஆண்கள் ஹாக்கியில் இந்தியா வெற்றி!
பிரான்சில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழாவில் இந்தியா நான்காவதாகவும் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
மல்யுத்தத்தில் தங்கப் பதக்கத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட வினேஷ் போகத் திடீரென தகுதியிழப்பு செய்யப்பட்டது, இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.
இந்த நிலையில், ஆண்களுக்கான ஆக்கிப் போட்டியில் இன்று ஸ்பெயின் அணியுடன் ஆடிய இந்திய அணி இரண்டு கோல்களைப் போட்டது.
ஒரு கோலை மட்டுமே அடித்த ஸ்பெயினை இந்திய அணி வெற்றிகொண்டது.
இதன் மூலம் வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.
இந்திய ஆக்கி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அணியின் வெற்றிக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பல தலைவர்களும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.