ஆசிய விளையாட்டு: 81 பதக்கங்களுடன் 5ஆவது இடத்தில் இந்தியா!

Indian cricket team won gold
தங்கம் வென்ற இந்திய கிரிக்கெட் அணி
Published on: 

ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்திய வீரர்கள் இதுவரை மொத்தம் 80 பதக்கங்கள் பெற்றுள்ளனர்.

கிரிக்கெட்:

ஆடவர் டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில், இந்தியா 19 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி, 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்களுடன் போட்டியை நிறைவு செய்தது.

ஹாக்கி :

இந்திய மகளிா் ஹாக்கி அணி, சீனாவைத் தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளது.

வில்வித்தை:

மகளிர் தனிநபர் வில்வித்தைப் போட்டியில், இந்திய வீராங்கனை கும்கும் மோஹோத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

மகளிர் வில்வித்தைப் போட்டியில் கும்கும் மோஹோத், அங்கிதா பகத், கீா்த்தி சா்மா ஆகியோா் அடங்கிய இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது.

ஆடவர் தனிநபர் வில்வித்தைப் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சௌஹான் வெண்கலம் வென்று இந்தியாவுக்கான 80ஆவது பதக்கத்தை வென்றுள்ளார்.

ஆடவர் பிரிவில் தீரஜ் பொம்மதேவரா, யஷ்தீப் போகே, நீரஜ் சௌஹான் ஆகியோா் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளது.

கலப்புப் பிரிவினர் போட்டியில் இந்தியாவின் கும்கும் மோஹோத், தீரஜ் பொம்மதேவரா கூட்டணி வெள்ளிப் பதக்கம் பெற்றனர்.

குத்துச்சண்டை:

மகளிருக்கான குத்துச்சண்டை 75 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போா்கோஹெய்ன், தன் பிறந்தநாளன்று இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.

கோல்ஃப்:

மகளிர் தனிநபர் கோல்ஃப் போட்டியில், இந்திய வீராங்கனை பிரணவி சரத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

தங்கப் பதக்கம் வென்ற பிரணவி, அதிதி அசோக், தீக்‌ஷா தாகர் ஆகியோர் இந்தியா சார்பில் பங்கேற்ற கோல்ஃப் மகளிரணிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.  

பதக்கப் பட்டியலில் இந்திய அணி:

இதுவரை இந்தியா 19 தங்கம், 26 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 81 பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com