
நேற்று நடைபெற்ற டி20 போட்டியில், ஜிம்பாப்வேவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா, ஜிம்பாப்வே இடையேயான முதல் டி20 போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரே விளையாட்டு கிளப் திடலில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
பேட்டிங்கில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வெஸ்லி மத்வீர் 39 ரன்கள், மருமானி 27 ரன்கள், ரியான் பர்ல் 26 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணியின் மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 13.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி 126 ரன்கள் எடுத்து போட்டியில் முன்னிலை பெற்றது.
இந்திய அணியின் வைபவ் சூர்யவன்ஷி அரை சதம் அடித்து சாதனை படைத்தார். இவர் 19 பந்துகளில், 4 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இவரைத் தொடர்ந்து, இஷான் கிஷன் 35 ரன்கள், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன்கள், திலக் வர்மா 6 ரன்கள் எடுத்தனர்.
இதுவரை சச்சின் படைத்திருந்த சாதனையை இந்த போட்டியில் முறியடித்துள்ளார் சூர்ய வன்ஷி. சச்சின் டெண்டுல்கர் தனது வயது 16 ஆண்டுகள் 213 நாள்களாக இருக்கையில் தன் முதல் சர்வதேச அரை சதம் அடித்திருந்தார். அதன் மூலம் சர்வதேச அரை சதம் அடித்த இளம் இந்திய வீரர் என்ற சாதனை இதுவரை அவர் வசம் இருந்தது. தற்போது தன் வயது 15 ஆண்டுகள்,118 நாள்களாக இருக்கையில் தனது முதல் சர்வதேச அரை சதத்தை வைபவ் சூர்யவன்ஷி அடித்துள்ளார். இன்னும் பல சாதனைகளை அவர் முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது! இளம் வயது சாதனைகள் பலவற்றை அவர் முறியடிப்பார் என எதிர்பார்க்கலாம்!