
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் ரோஹித் சர்மா 7 ரன்களிலும், விராட் கோலி 5 ரன்களிலும், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 22 ரன்களிலும் வெளியேறினர்.
இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன், அக்சர் படேல் ஆகிய இருவரும் தலா 46 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியின் நமன் தீர் 22 ரன்களும், முகமது சிராஜ் 14 ரன்களும் எடுத்தனர். அர்ஷ்தீப் சிங் 4 பந்துகளில் 14 ரன்களை குவித்தார்.
போட்டியின் முடிவில் இந்திய அணி 42.1 ஓவர்களில் 209 ரன்களுடன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.
நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர், ஜேக்கப் டஃபி தலா 3 விக்கெட்டுகளையும், மேத்யூ ஃபிஷர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அடுத்ததாக, 210 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்தியாவின் பந்து வீச்சால் ரன்களை எடுக்கத் திணறியது. நியூசிலாந்து அணியின் டீன் பாக்ஸ்கிராப்ட் 31 ரன்களும், கேப்டன் மிட்செல் சான்ட்னர், நிக் கெல்லி தலா 24 ரன்களும், வில் யங் 22 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், அக்சர் படேல் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இறுதியாக, நியூசிலாந்து அணி 48.1 ஓவர்களில் 187 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
22 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி அடைந்ததுடன் 3-1 கணக்கில் இந்த தொடரையும் கைப்பற்றியது.
கௌதம் கம்பீர் பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்து கைப்பற்றும் முதல் அயல்நாட்டு மண் தொடர் இது! ஏழாண்டுகளில் நியூசிலாந்துக்கு சொந்தமண்ணில் முதல் ஒருநாள் போட்டித் தொடர் இழப்பு இதுவாகும்!