இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமனம்!

Smriti mandana
ஸ்மிருதி மந்தனா
Published on: 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ஹர்மன்பிரீத் கெளர், அனைத்துவிதமான போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, இந்திய அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹர்மன்பிரீத் கெளர் அணியில் இல்லாதபோது நடைபெற்ற 22 சர்வதேசப் போட்டிகளில், ஸ்மிருதி மந்தனா கேப்டனாகப் பணியாற்றி 15 சர்வதேச போட்டியில் வெற்றி வாகை சூடியுள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து, இந்திய அணிக்காக விளையாடி வரும் மராட்டியத்தைச் சேர்ந்த மந்தனா, இதுவரை 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 14 சதம் உட்பட 5,411 ரன்களும், 179 இருபது ஓவர் கிரிக்கெட்டில் விளையாடி 2 சதம் உட்பட 4,867 ரன்களும், 9 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி சாதித்திருக்கிறார். 

அண்மையில் டைம் இதழ் வெளியிட்ட 2026ஆம் ஆண்டுக்கான மிகவும் செல்வாக்கு மிகுந்த 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஒரே இந்தியர் ஸ்மிருதி மந்தனா என்பது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com