மகளிர் ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனைகள் வெண்கலம்!

Indian players won bronze medal in Women's Skeet Shooting
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனைகள்
Published on

ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த நாடுகளுக்காக நடத்தப்படும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் 43 வகையான விளையாட்டுகளில் மொத்தம் 469 பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.

ஆசிய விளையாட்டு போட்டியின் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய மகளிர் அணி வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளது.

மகளிர் ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ரைசா தில்லன், மகேஸ்வர் செளஹான், பரினாஸ் தலிவால் ஆகியோர் அடங்கிய அணி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளது.

துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியா மொத்தம் நான்கு வெள்ளி, இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு, 198 கிலோ எடையைத் தூக்கி வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.

மகளிருக்கான ஹாக்கிப் போட்டியில், குரூப் பி பிரிவினருக்கான போட்டியில் இந்தியா, தாய்லாந்து அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய இந்திய அணி, 20 -1 கோல்கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com