உலகக் கோப்பை இந்திய அணி
உலகக் கோப்பை இந்திய அணி

கிரிக்கெட்- உலகக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு!

கே.எல்.ராகுல் இடம் பிடித்துள்ளார்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19வரை 13ஆவது ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன.

அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற உள்ள முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோதுகின்றன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் எதிர்கொள்கிறது.

இந்த உலகக் கோப்பைத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை, இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இன்று அறிவித்தது. இதில், காயத்திலிருந்து மீண்டுள்ள கே.எல். ராகுலும் இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணி விவரம்:

ரோகித் சர்மா (கேப்டன்),

ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்),

சுப்மன் கில்,

விராட் கோலி,

ஸ்ரேயாஸ் ஐயர்,

கே.எல். ராகுல்,

இஷான் கிஷான்,

சூர்யகுமார் யாதவ்,

ரவீந்திர ஜடேஜா,

அக்சர் படேல்,

குல்தீப் யாதவ்,

முகமது ஷமி,

பும்ரா,

ஷர்துல் தாகூர்,

முகமது சிராஜ்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com