மகளிர் டி20 உலகக்கோப்பை : வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா சுமாரான வெற்றி!

Indian team won the t20 match
வங்கதேசத்தை இந்திய அணி வீழ்த்தியது.
Published on

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது.

டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு வங்கதேச அணி 136 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியைச் சார்ந்த பெளலர்கள் ராதா யாதவ் 3 , ஸ்ரீசரணி 2, ரேணுகா சிங், நந்தினி சர்மா தலா 1 விக்கெட்டுகளை அணிக்கு எடுத்துக் கொடுத்தனர்.

இந்திய அணியின் ஷஃபாலி வர்மா 8 பவுண்டிரிகள், 1 சிக்ஸர் அடித்து 53 ரன்களுடன் வெளியேறினார்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் 26, யஸ்திகா பாட்டியா 23, ரிச்சா கோஸ் 10, ஸ்மிருதி மந்தனா 8 ரன்களுடன் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்13, தீப்தி சர்மா 5 ரன்களுடன் போட்டியின் முடிவில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பாேட்டியின் இறுதியில், 16.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 139 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது. ஆனாலும் கேட்ச்களை கோட்டை விட்டது போன்ற பல தவறுகளை இந்திய அணி செய்ததால் இது அபார வெற்றி அல்ல; தடுமாறிய வெற்றி என்றே கருதப்படுகிறது. இதே ரீதியில் விளையாடினால் சீக்கிரம் இந்திய அணி வீட்டுக்குத் திரும்பும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com