ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜா

ஓய்வை அறிவித்த ஆல்ரவுண்டர்!.. அடுத்தடுத்து கிளம்பும் சீனியர்ஸ்!

இந்திய அணியின் ஆல்ரவுண்டரும், இடக்கை சுழற்பந்து வீச்சாளருமான ரவீந்திர ஜடேஜா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “நன்றி நிறைந்த இதயத்துடன், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். ஒரு வலிமையான குதிரை பெருமையுடன் துள்ளிக் குதிப்பதைப் போல, நான் எப்போதும் என் நாட்டிற்காக என்னால் முடிந்ததைச் செய்து வருகிறேன்.

ஆனால், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். டி20 உலகக் கோப்பையை வெல்வது ஒரு கனவு. அது நனவாகிவிட்டது. இது எனது டி20 சர்வதேச வாழ்க்கையின் உச்சம். என்னுடைய நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், உங்களின் அசைக்க முடியாத ஆதரவுக்கும் நன்றி. ஜெய்ஹிந்த்..!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில் ஜடேஜாவும் ஓய்வு அறிவித்தது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய அணிக்காக 74 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள 35 வயதான ரவீந்திர ஜடேஜா 515 ரன்கள் எடுத்து, 54 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com