இந்தியா வந்த மெஸ்ஸி... இன்று மாலை யாரை சந்திக்கிறார் தெரியுமா..?

லியோனல் மெஸ்ஸி
லியோனல் மெஸ்ஸி
Published on

இந்தியா வருகை தந்துள்ள கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இன்று மாலை அவரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சந்திக்கிறார்.

இந்திய கால்பந்து ஆர்வலர்களின் நீண்ட நாள் கனவை நனவாக்கும் வகையிலும், கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தனது வரலாற்று சிறப்புமிக்க ‘GOAT டூர்’ சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அதிகாலை இந்தியா வந்தடைந்தார்.

அதிகாலை 1.30 மணியளவில் கொல்கத்தா விமான நிலையத்துக்கு வந்தடைந்த மெஸ்ஸியை, ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

அவரது இந்தியப் பயணம் கொல்கத்தாவில் தொடங்கி, ஹைதராபாத், மும்பை மற்றும் புது டெல்லி என முக்கிய நகரங்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் லியோனல் மெஸ்ஸி சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது.

அங்குள்ள யுப பாரதி மைதானத்துக்கு செல்லும் மெஸ்ஸி, முதல்வர் மம்தா பானர்ஜி, நடிகர் ஷாருக் கான், சவுரவ் கங்குலி உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார்.

கொல்கத்தாவைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் 7 பேர் கொண்ட கால்பந்துப் போட்டியில் விளையாட உள்ளார். அப்போது மெஸ்ஸியை ராகுல் காந்தி சந்திக்க உள்ளார்.

மும்பையில் தொண்டு நிகழ்ச்சிகள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்கும் கால்பந்துப் போட்டியில் கலந்துகொள்வார். வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.

டிசம்பர் 15 அன்று டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து பேச உள்ளார்.

அருண் ஜெட்லி மைதானத்தில் மினர்வா அகாடமி வீரர்களைப் பாராட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

இதனுடன் தனது இந்தியப் பயணத்தை நிறைவு செய்யவுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com