உலகக் கோப்பைகளில் அதிக கோல்கள்... சாதனையை முறியடித்தார் மெஸ்ஸி!

உலகக் கோப்பைகளில் அதிக கோல்கள்... சாதனையை முறியடித்தார் மெஸ்ஸி!
Published on

இந்த உலகில் கோட் என்றால் அது தான் மட்டும்தான் என மீண்டும் நிரூபித்திருக்கிறார் அர்ஜெண்டினா கால்பந்து அணி கேப்டன் லயோனல் மெஸ்ஸி.

திங்கள் அன்று நடந்த ஆஸ்திரியாவுக்கு எதிரான போட்டியில் இரண்டு கோல்கள் அடித்து தம் அணியை 2-0 என்ற கணக்கில் வெற்றிபெறச் செய்து அடுத்த நாக் அவுட் போட்டிகளுக்கு இடத்தை உறுதி செய்தார். அவர்கள் இடம்பெற்றுள்ள குரூப் ஜே-வில் இன்னொரு ஆட்டமும் மிச்சமிருக்கிறது.

இதன் மூலம் இந்த கோப்பையில் 5 கோல்களை அடித்தது மட்டுமல்ல; இதுவரை உலகக்கோப்பைகளில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனையையும் செய்துள்ளார். இவரது கோல்களின் எண்ணிக்கை 18.

இதன் மூலம் ஆண், பெண் கால்பந்து அணிகளின் உலகக்கோப்பைகளையும் சேர்த்து 17 கோல்கள் போட்டு முதலிடத்தில் இருந்த பிரேசிலின் வீராங்கனை மார்த்தா என்பவரின் சாதனையை முறியடித்தார்.

இதுவரை ஆடியதில் தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் தொடர்ச்சியாகவும் கோல் போட்டுள்ளார்.

39 வயதில் இந்த 10 ஆம் எண் ஜெர்சி அணிந்துள்ள வீரர் ஆடும் ஆட்டம் அர்ஜெண்டினா ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. மரடோனாவின் பாரம்பரியத்தை மீட்டெடுத்து உலகக்கோப்பையை வெல்ல உதவுவாரா மெஸ்ஸி?

logo
Andhimazhai
www.andhimazhai.com