முதுகெலும்புகள்: மொயீன் அலியும் ஸ்டூவர்ட் ப்ராடும்
முதுகெலும்புகள்: மொயீன் அலியும் ஸ்டூவர்ட் ப்ராடும்

ஜெயிச்சிட்டோம்! ஆனால் இரண்டு விக்கெட் போச்சே! சோகத்தில் ரசிகர்கள்!

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியை 2-2 என்ற அளவில் இங்கிலாந்து சமன் செய்துள்ளது. முதல் இரு போட்டிகளை இழந்த நிலையில் இங்கிலாந்து கடுமையாகப் போராடி மீண்டு வந்த து குறிப்பிடத்தக்கது.

ஆனால் இத்தொடரின் குறிப்பிடத்தக்க அம்சம் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் ஸ்டூவர் ப்ராட் தன் ஓய்வை கடைசிப் போட்டியின்போது திடீரென அறிவித்தது ஆகும். 37 வயதாகும் ப்ராட் 167 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 602 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

டி20 போட்டி ஒன்றில் இந்திய வீரர் யுவராஜ் சிங் இவரது பந்துவீச்சில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்தார். இந்த நிகழ்வுக்குப் பிறகு ப்ராட் மேலும் மனவலிமையுடன் திரும்பி வந்து சிறப்பாக ஆடி, இங்கிலாந்தின் முன்னணி பந்துவீச்சாளர் ஆனது குறிப்பிடத்தக்கதாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இரு முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இங்கிலாந்து பந்துவீச்சாளர் இவர்தான்.

அதேபோல இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சில் முதுகெலும்பாகத் திகழும் சிஎஸ்கே அணியின் வீரர் மொயின் அலியும் தன் ஓய்வு முடிவை இந்த கடைசி போட்டியில் அறிவித்தார். ஏற்கெனவே டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்திருந்தார். ஆனால் இங்கிலாந்து அணி கேட்டுக்கொண்டதன் பேரில் அவர் திரும்பவும் வந்து இந்த தொடரில் ஆடி இருந்தார். ஆனால் இனி ஓய்வு ஓய்வுதான்.. திரும்பப்போவது இல்லை என அவர் கூறி உள்ளார்.

ப்ராட், மொயின் அலி ஆகிய இரு வீரர்கள் ஓய்வை அறிவித்திருப்பதால் அந்த அணியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com