ருத்துராஜ் கெய்க்வாட்
ருத்துராஜ் கெய்க்வாட்

விலகிய தோனி... சி.எஸ்.கே.வின் புதிய கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் அறிவிப்பு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். 17ஆவது சீசன் நாளை மறுநாள் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 5 கோப்பைகளை வென்றுள்ளது. நடப்பு சீசனிலும் கோப்பை வென்றால், ஐ.பி.எல். தொடரில் அதிக கோப்பை வென்ற அணி என்ற வரலாற்று சாதனையைப் படைத்துவிடும். இதனால், இந்த சீசனில் சிஎஸ்கே மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, மிட்செல் சாண்ட்னர் போன்ற சுழல் பந்துவீச்சாளர்கள் இருப்பது அணியின் பலமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் புது கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். 13 வருடங்களாக சி.எஸ்.கே.வின் கேப்டனாக இருந்த வந்த தோனி, இந்த தொடரிலேயே ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கெய்க்வாட் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கெய்க்வாட் கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து சென்னை அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com