மஞ்சள் ஜெர்சிக்கு பை...பை! ஓய்வுபெறும் தல தோனி, சிஎஸ்கே ஆலோசகர் ஆகிறார்!

M.S.Dhoni retires from IPL and takes charge as CSK mentor
மகேந்திர சிங் தோனி
Published on: 

கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2027ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சி.எஸ்.கே. அணியின் ஆலோசகராக பொறுப்பேற்கவுள்ளதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை 6 மணிக்குள், 2027 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் அணிகள், வீரர்கள் அடங்கிய பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் எம்.எஸ். தோனி, தங்கள் அணியின் ஆலோசகராக மட்டும் செயல்படுவார் என சி.எஸ்.கே. கூறி உள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை, 16 சீசன்களில் தோனி சி.எஸ்.கே. அணியில் விளையாடியுள்ளார். சி.எஸ்.கே. அணி தடை செய்யப்பட்ட 2016, 2017 ஆகிய இரண்டு ஆண்டுகள் மட்டும் புனே அணியில் இவர் விளையாடினார்.

தோனியின் தலைமையில் சி.எஸ்.கே. அணி ஐந்து முறை ஐ.பி.எல். சீசன் பட்டத்தையும், இரண்டு சாம்பியன் லீக் டி20 டைட்டிலையும் வென்றுள்ளது.

சிறந்த பேட்ஸ்மேனாகக் கருதப்படும் இவர், 5,314 ரன்களுடன் சிஎஸ்கேவுக்காக அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரராக உள்ளார்.

“தோனி இல்லாத சிஎஸ்கேவை நினைத்துப் பார்க்கமுடியவில்லை. நாங்கள் இணைந்தே வெற்றிகளையும் தோல்விகளையும் கடந்த 20 ஆண்டுகளாகப் பார்த்து வந்துள்ளோம்”- என சிஎஸ்கே இணைஉரிமையாளர் என்.சீனிவாசன் கூறிஉள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram