பிரக்ஞானந்தா - கார்ல்சன்
பிரக்ஞானந்தா - கார்ல்சன்

நார்வே செஸ் தொடர்: கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

நார்வே செஸ் தொடரின் மூன்றாவது சுற்றில், உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சனை, இந்தியாவின் பிரக்ஞானந்தா வீழ்த்தினார். 'கிளாசிக்கல்' முறையில் கார்ல்சனை, பிரக்ஞானந்தா வீழ்த்துவது இதுவே முதன்முறை ஆகும்.

நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. ஐந்து முறை உலக சாம்பியன் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியன் டிங் லிரென், இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு சுற்றிலும் இரு முறை மோத வேண்டும்.

இதன் முதல் சுற்றில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, இரண்டாவது சுற்றில், டிங் லிரெனிடம் தோல்வி கண்டார்.

இந்நிலையில், இன்று நடந்த மூன்றாவது சுற்றில் கார்ல்சனை எதிர்கொண்டார். இதில் வெள்ளை காய்களை கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா, அபாரமாக செயல்பட்டு கார்ல்சனை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம், 5.5 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com