பிரேசிலைப் போட்டுத் தள்ளிய நார்வே... கடைசி நேரத்தில் இரண்டு கோல் அடித்து சாதித்த ஹாலேண்ட்!

Haaland from Norway
ஹாலேண்ட்
Published on: 

பலம் வாய்ந்த பிரேசில் அணியைத் தோற்கடித்து, கால் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நார்வே.நேற்று நடந்த ஆட்டத்தில் இந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஹாலேண்ட் ஆட்டத்தின் இறுதியில் இரண்டு கோல் போட்டு அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

கூடுதல் நேரத்தில் பிரேசிலின் நெய்மார், பெனால்டி மூலம் ஒரு கோல் அடித்தார். ஆனால் அது போதவில்லை. 1990க்குப் பிறகு காலிறுதி வாய்ப்பை இழந்துள்ளது பிரேசில். நார்வேக்கு இதுதான் முதல் காலிறுதி.

ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே பிரேசிலுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை வினிசியஸ், நெய்மார் போன்ற வீரர்கள் அடிப்பார்கள் எனப் பார்த்தால் கைமாரிஸ் என்ற வீரரிடம் அளித்தார்கள். அவர் அடித்ததை நார்வே கோல் கீப்பர் தடுத்துவிட்டார். இதை சரியாக அடிக்காத அவ்வீரரை பிரேசில் ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகிறார்கள். பிரேசில் தோல்வி பொதுவாகவே கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சிதான். அதே சமயம் ஹாலேண்ட் அதிரடி அவரை மெஸ்ஸி, எம்பாப்பே ஆகியோருக்கு சமமாக ஏழு கோல்களுடன் தங்கக் காலணி போட்டியாளர் ஆக்கி உள்ளது. ஆறடி ஐந்து அங்குல உயரம் கொண்ட ஹாலேண்ட், நார்வே ரசிகர்களால் கொண்டாடப் படுகிறார். இவர் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக ஆடுபவர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com