பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

சர்வதேச ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலிடம்! - ஐசிசி

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியதன் மூலம் ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த மே மாதம் பாகிஸ்தான் அணி முதன்முதலாக ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்தது. ஆனால் ஒரே நாளில் முதலிடத்தினை இழந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

23 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி 2,725 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியும் இந்திய அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது. நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் முறையே 4 மற்றும் 5ஆம் இடத்தில் உள்ளது.

ஆசியக் கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் வரும் நிலையில் இந்த தரவரிசை பட்டியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com