சாலைப் பாதுகாப்பு டி20 தொடரில் இடம்பெறும் வீரர்கள்
சாலைப் பாதுகாப்பு டி20 தொடரில் இடம்பெறும் வீரர்கள்

சாலைப் பாதுகாப்பு டி20 தொடரில் இடம்பெற்ற பாகிஸ்தான் அணி!

சாலை பாதுகாப்பு தொடர்பாக நடத்தப்படும் டி20 தொடரில், முதல் முறையாக பாகிஸ்தான் அணி இந்த வருடம் இடம்பெற்றுள்ளது.

சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச கிரிகெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள், டி20 போட்டியில் விளையாடி வருகிறார்கள். ஏற்கெனவே, இந்தியாவில் இரண்டு தொடர்கள் நடைபெற்றுள்ள நிலையில், இந்த ஆண்டு நடைபெற உள்ள மூன்றாவது தொடர் இங்கிலாந்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியானது செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெறுகிறது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் நடைபெற்ற முதல் இரண்டு தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்காததற்கு இரு நாடுகளின் அரசியல் மோதலே காரணம் என கூறப்படுகிறது.

இந்த டி20 தொடரில், முன்னாள் வீரர்களான சச்சின் , பீட்டர்சன், ஜெயசூர்யா, வாட்சன், தில்ஷன், யுவராஜ் சிங், லாரா, ஜான்டி ரோட்ஸ், ஷேன் பாண்ட் உள்ளிட்டோர் விளையாடுகிறார்கள் என்பதால், இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com