பருல் சவுத்ரி
பருல் சவுத்ரி

ஆசிய விளையாட்டுப் போட்டி: தங்கம் வென்று அசத்திய பருல் சவுத்ரி!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை பருல் சவுத்ரி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

சீனாவின் ஹாங்சோவ் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டித் தொடரின் 11-வது நாளான இன்று, 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில், வெண்கலப் பதக்கம் வென்றார், தமிழக வீராங்கனை ராம்ராஜ். 55.68 வினாடிகளில் இலக்கை எட்டி அவர் இந்தப் பதக்கத்தை வென்றார்.

அதேபோல், 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை பருல் சவுத்ரி தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

முன்னதாக, பெண்களுக்கான 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பருல் சவுத்ரி வெள்ளிப் பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com