சீனியர் மகளிர் டி20 - உலக சாதனை படைத்த வீராங்கனை!

Prema Rawat
பிரேமா ராவத்
Published on: 

புனேவில் நடைபெற்ற சீனியர் மகளிர் டி20 டிராபி எலைட் போட்டியில் அதிவேகமாக 50 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளார் பிரேமா ராவத்.

புனேவின் எம்.சி.ஏ. கிரிக்கெட் மைதானத்தில் உத்தரகாண்ட் அணிக்கும் ஐதராபாத் அணிக்கும் இடையே நடந்துமுடிந்த போட்டியில் 24 வயதான பிரேமா ராவத் உலக சாதனையைப் படைத்துள்ளார்.

இதன் மூலமாக 15 பந்துகளில் அரைசதம் அடித்த பாகிஸ்தான் வீராங்கனை பாத்திமா சனாவின் சாதனையை இவர் முறியடித்துள்ளார். இவர் 3 ஃபோர், 6 சிக்சர் என 14 பந்துகளில் 50 ரன்களை விளாசியுள்ளார்.

இந்நிலையில், இந்தப் போட்டியில் 2 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை பிரேமா ராவத் விளையாடிய உத்தரகாண்ட் அணி குவித்தது. இந்த அணியை எதிர்த்துப் போட்டியிட்ட ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் மட்டுமே எடுத்து 89 ரன்கள் வித்தியாசத்தில் பயங்கர தோல்வி அடைந்தது.

இளம் வீராங்கனை பிரேமா ராவத்தின் சாதனையைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram