கேப்டனாக அறிவிக்கப்பட்ட போது ரோகித் சர்மா கொடுத்த ரியாக்ஷன்!
ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை தொடரின் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டபோது, அவர் கொடுத்த ரியாக்ஷன் தொடர்பான வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.
அமெரிக்கா – மேற்கிந்திய தீவுகளில் வரும் ஜூன் மாதம் ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பார் என தகவல்கள் வெளியாகின.
அதேபோல், நீண்ட நாள்களாக மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடாமல் இருந்தனர்.
மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ரோகித்திடமிருந்து ஹர்திக் பாண்டியாவுக்கு அளித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்றும், அவர் தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் எனவும் ஜெய் ஷா நேற்று தெரிவித்தார். அப்போது ரோகித் சர்மா சிரித்துக் கொண்டே கூலாக இருக்க, சுற்றியிருந்த வீரர்கள் அவரை ஊக்கப்படுத்தினர். அது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.