கடைசி நிமிட கோலால் அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின்!

Spain won the quater finals
அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின் அணி
Published on

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் காலிறுதி சுற்றில் ஸ்பெயின், பெல்ஜியம் அணிகள் மோதின.

இதில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இந்தப் போட்டி நடைபெற்றது.

போட்டியின் 30ஆவது நிமிடத்தில் பேபியன் ரூய்ஸ் கோல் அடித்து ஸ்பெயினுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

பின்னர், 41ஆவது நிமிடத்தில் பெல்ஜியத்தின் சார்லஸ் டி கெட்டலாரே கோல் அடித்து போட்டியைச் சமநிலைக்குக் கொண்டுவந்தார்.

இதனால் முதல் பாதி போட்டி 1-1 என்ற புள்ளிக் கணக்கில் முடிந்தது.

இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாகப் போராடிய நிலையில், போட்டியின் 88ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் மாற்று கோல் கீப்பர் சென்னே லாம்மென்ஸ், அவருக்கு வந்த பந்தைக் கட்டுப்படுத்தத் தவறினார்.

அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ஸ்பெயின் அணியின் வீரர் மெரினோ, ரீபவுண்டில் கோல் அடித்து ஸ்பெயின் அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தார்.

இதனால் ஸ்பெயின் அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com