சுப்மன் கில்
சுப்மன் கில்

டெஸ்ட்: சதம் அடித்து அசத்திய சுப்மன் கில்: வலுவான நிலையில் இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுப்மன் கில் சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம், இங்கிலாந்து அணி வெற்றி பெற 399 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது இந்திய அணி.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் வென்ற இங்கிலாந்து 1-0 என முன்னிலையில் உள்ளது.

இரண்டாவது டெஸ்ட் விசாகப்பட்டனத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 396 ரன்கள் குவிக்க, இங்கிலாந்து அணி 253 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. இதனால் 143 ரன் முன்னிலை பெற்ற இந்திய அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. இரண்டாவது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன் எடுத்து 171 ரன் முன்னிலை பெற்றிருந்தது.

மூன்றாவது நாளான இன்று, ரோகித் சர்மா (13), ஜெய்ஸ்வால் (17), ஸ்ரேயாஸ் (29), ரஜட் படிதர் (9) என விக்கெட்களை இழந்தனர்.

நிலைத்து நின்று விளையாடிய சுப்மன் கில் சதம் (104) அடித்து விக்கெட்டை இழந்தார். பின்னர் அக்சர் படேல் (45) அரைசதம் அடிக்காமல் ஏமாற்றினார். அடுத்து களமிறங்கிய ஸ்ரீகர் பாரத் (6), அஸ்வின் (29) என வெளியேறினர். யாதவ், பும்ரா, முகேஷ் குமார் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை இழக்க, இந்திய அணி 255 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி வெற்றி பெற 399 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது இந்திய அணி.

logo
Andhimazhai
www.andhimazhai.com