ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 259 ரன்கள் வித்தியாசத்தில் சண்டிகரை தமிழக அணி தோற்கடித்துள்ளது. இதன் மூலமாக தொடர்ந்து மூன்று போட்டிகளில் தமிழக அணி வெற்றி பெற்று ஹேட்ரிக் சாதனையைப் படைத்துள்ளது.
தமிழ்நாடு, சண்டிகர் அணிகளுக்கு இடையிலான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி, சண்டிகரில் உள்ள செக்டார் 16 மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடிய தமிழக அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 571 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
முதல் இன்னிங்சில் தமிழக அணியில் விளையாடிய அஜித் ராம் 115 ரன்களைக் குவித்தார். மேலும், பந்துவீச்சில் அஜித் ராம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்-ரவுண்டராக அசத்தினார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய சண்டிகர் அணி முதல் இன்னிங்ஸில் 94 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து விளையாடிய சண்டிகர் அணி இரண்டாவது இன்னிங்கிஸில் 218 ரன்களுடன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
முன்னதாக, உத்தரகாண்ட் அணி, ரயில்வே அணிகளை தமிழக அணி வீழ்த்தியது. சண்டிகர் அணிக்கு எதிரான வெற்றியின் மூலமாக தமிழக அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.
உத்தரகாண்ட் அணியுடனான போட்டியில் தமிழக அணி ஒரு இன்னிங்ஸ், 66 ரன்கள் வித்தியாசத்திலும், ரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளது.