பி.டி.உஷாவின் 40 ஆண்டு கால சாதனையை சமன் செய்த வித்யா ராம்ராஜ்!

வித்யா ராம்ராஜ்
வித்யா ராம்ராஜ்
Published on: 

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகள வீராங்கனை பி.டி. உஷாவின் சாதனையை தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் சமன் செய்துள்ளார்.

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்ஸு நகரில் செப்டம்பர் 23 தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 61 பிரிவுகளில் நடைபெறும் 40 விளையாட்டுப் போட்டிகளில் 12 ஆயிரம் பங்கேற்கின்றனர்.

இதில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 55.42 வினாடிகளில் இலக்கை அடைந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை வித்யா ராம்ராஜ் சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலமாக கேரளத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை பி.டி. உஷாவின் சாதனையை வித்யா ராம்ராஜ் சமன் செய்துள்ளார்.

1984 ஒலிம்பிக் தொடரில் 55.42 வினாடிகளில் பி.டி. உஷா இலக்கை அடைந்தது சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

13 தங்கம், 21 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களை பெற்று இந்தியா 4 ஆவது இடத்தில் உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com