வினேஷ் போகத்
வினேஷ் போகத்

வினேஷ் போகத்தின் மனு தள்ளுபடி: சிதைந்தது பதக்க கனவு!

Published on

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, விளையாட்டுகளுக்கான சர்வதேச நடுவர் மன்றம் நேற்று நிராகரித்தது.

பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தத்தில் பங்கேற்ற வினேஷ் போகத், முதல் சுற்றிலேயே நடப்பு சாம்பியனை அசத்தலாக வீழ்த்தினாா். அடுத்தடுத்த சுற்றுகளிலும் வென்ற அவா், இறுதிச்சுற்றுக்கும் தகுதிபெற்றார். அதன் மூலம், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்தியாவின் முதல் வீராங்கனை என்ற பெருமையை அவா் பெற்றார்.

இந்நிலையில், இறுதிச்சுற்றுக்கு முன்பான பரிசோதனையின்போது நிா்ணயிக்கப்பட்ட 50 கிலோவை விட எடையை விட 100 கிராம் அதிகமாக இருந்ததால், விதிகளின்படி அவா் போட்டி நிர்வாகத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வினேஷ் போகத், தனது தகுதிநீக்கத்துக்கு எதிராகவும், தனக்கு வெள்ளிப் பதக்கத்தை பகிா்ந்து அளித்திடக் கோரியும், விளையாட்டுகளுக்கான சர்வதேச நடுவர் மன்றத்தில் அந்த நாளிலேயே மேல்முறையீடு செய்தாா். அதன் மீதான விசாரணை மேற்கொண்ட நடுவா் மன்றம், இரு முறை தீா்ப்பை ஒத்திவைத்த நிலையில், வினேஷ் போகாட்டின் மனுவை நிராகரிப்பதாக நேற்று அறிவித்தது.

இதன் மூலம் அவரின் வெள்ளிப் பதக்க கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. நடுவா் மன்றத்தின் இந்தத் தீர்ப்பு அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷா தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com