டேவிட் வார்னர்
டேவிட் வார்னர்

பச்சை நிறத் தொப்பியைத் தொலைத்த டேவிட் வார்னர் வருத்தம்!

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்கார் டேவிட் வார்னரின் பை திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் அணியுடன் டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் கடைசிப் போட்டி சிட்னியில் நடைபெற உள்ளது. அதற்காக ஆஸ்திரேலிய அணி மெல்போர்னிலிருந்து சிட்னிக்குச் சென்றுள்ளது. அப்போதுதான் டேவிட் வார்னரின் பை காணாமல் போயுள்ளது.

அந்தப் பையில் வார்னரின் டெஸ்ட் போட்டிகளில் அணியும் பச்சை நிறத் தொப்பியும் இருந்துள்ளது. அந்தத் தொப்பியானது, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு டெஸ்ட் போட்டிகளுக்கு என பிரத்யேகமாக அளிக்கப்படுவதாகும்.

திருடப்பட்ட அந்தப் பையில் அவரது இரண்டு பச்சை நிறத் தொப்பிகள் உள்ளன. அதில் ஒன்று அவருக்கு முதன் முதலில் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன போது அளிக்கப்பட்டது. அதை அணிந்து தன் கடைசி போட்டியில் விளையாட வேண்டும் என வார்னர் நினைத்துள்ளார். ஆனால், அந்த தொப்பி திருடப்பட்டிருப்பது வார்னரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், வார்னர் தனது பையைத் திரும்ப ஒப்படைக்குமாறு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.

"என் லக்கேஜிலிருந்து பையை யாரோ ஒருவர் எடுத்து இருக்கிறார். அதில் என் குழந்தைகளுக்கு வாங்கிய சில பரிசுப் பொருட்கள் உள்ளன. அதில் தான் என் பச்சை நிறத் தொப்பியும் உள்ளது. அது எனக்கு உணர்வுடன் ஒன்றியதாகும். என் கடைசி டெஸ்ட் போட்டியில் அதை அணிந்து செல்ல வேண்டும் என விரும்புகிறேன்." என வார்னர் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com