ராபின் மின்ஸ்
ராபின் மின்ஸ்

ஐ.பி.எல். ஏலம்; அறிமுக வீரருக்கு அதிக கிராக்கி! - யார் அவர்?

ஐ.பி.எல். மினி ஏலத்தில் ராபின் மின்ஸ் (வயது 21) என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ. 3.6 கோடிக்கு எலம் எடுத்துள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். சீசனுக்கான வீரர்களின் ஏலம் நேற்று துபாயில் நடைபெற்றது. இதற்கான இறுதிப்பட்டியலில் 333 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன.

10 அணிகளும் தங்களுக்கான வீரர்களை தேர்வு செய்வதில் மும்முரம் காட்டின. இறுதியில், 30 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 72 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

பத்து அணிகள் சார்பில் மொத்தமாக 230.45 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அதிகபட்சமாக கொல்கத்தா அணி ரூ.31.35 கோடி செலவிட்டது. இதில் பல வீரர்களுக்கான ஏலத்தொகை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதில், குஜராத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட ராபின் மின்ஸ்தான்.

ஜார்கண்ட் மாநிலம், பழங்குடி இனத்தைச் சேர்ந்த 21 வயதான ராபின் மின்ஸை, குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ. 3.6 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. அடிப்படை ஏலத்தொகயான 20 லட்ச ரூபாய் பிரிவில் இருந்த அவரை கைப்பற்றப் பல முன்னணி அணிகள் தீவிரம் காட்டின.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.2 கோடி ரூபாய் வரை ஆர்வம் காட்டியது. இறுதியில், குஜராத் அணி ராபினை ஒப்பந்தம் செய்தது. இதன் மூலம், ஐ.பி.எல். தொடரில் ஏலத்தில் எடுக்கப்பட்ட முதல் பழங்குடியின வீரர் என்ற பெருமையை ராபின் மின்ஸ் பெற்றார்.

ராபின் மின்ஸ் குடும்பத்தினர்
ராபின் மின்ஸ் குடும்பத்தினர்

யார் இந்த ராபின் மின்ஸ்?

ஜார்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த ராபின் மின்ஸ் எட்டு வயதிலிருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார். பத்தாம் வகுப்புக்கு பிறகு முழுநேரமாக கிரிக்கெட் விளையாடத் தொடங்கியுள்ளார்.

விக்கெட் கீப்பர், இடது கை பேட்ஸ்மேனான ராபின் மின்ஸ் தோனியின் தீவிர ரசிகர். தோனியின் வழிகாட்டியான சன்சல் பட்டாச்சார்யா தான் ராபினுக்கும் வழிகாட்டியாக இருந்துள்ளார்.

ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ராபினின் தந்தை, தற்போது ராஞ்சி விமான நிலையத்தில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். ராபினுக்கு இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com