இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்... இந்திய மகளிர் அணி அபார வெற்றி!

Women's cricket team
இந்திய மகளிர் அணி
Published on

இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் மகளிர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியில் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் யஸ்திகா பாட்டியா தனி முத்திரை பதித்தார். இரண்டாவது இன்னிங்சில் 113 ரன்கள் குவித்த அவர், லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்த முதல் மகளிர் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.

முதல் இன்னிங்சில் இந்தியா 285 ரன்கள் எடுத்தது. இதில் ஸ்மிருதி மந்தனா (83), ஹர்மன்ப்ரீத் கவுர் (58), தீப்தி ஷர்மா (57) ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் கிராந்தி கவுட் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி லார்ட்ஸ் கவுரவப் பலகையில் பெயர் பதித்த முதல் மகளிர் வீராங்கனையாக வரலாறு படைத்தார்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 169 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இரண்டாவது இன்னிங்சுக்கு 116 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி களம் இறங்கியது.

இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 341 ரன்களுடன் போட்டியை நிறைவு செய்தது.

இதனால் இங்கிலாந்து அணி 457 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சில் போட்டியிட்டது. ஆனால் அந்த அணி 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால், இந்தியா அபார வெற்றி பெற்றது.

இரண்டாவது இன்னிங்சில் சிநே ராணா 4 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com