மேக்னஸ் கார்ல்சன் - பிரக்ஞானந்தா
மேக்னஸ் கார்ல்சன் - பிரக்ஞானந்தா

உலக செஸ்: 2ஆம் சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது!

உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 2ஆம் சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தாவுக்கும், நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுக்கும் இடையே நடைபெற்றது. நேற்று நடைபெற்ற முதல் சுற்று டிராவில் முடிவடைந்தது. இதனால் இரண்டாம் சுற்று போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், இறுதிப் போட்டியின் 2ஆம் சுற்று ஆட்டம் இன்று மாலை தொடங்கி நடைபெற்றது. தமிழக வீரர் பிரக்ஞானந்தா கறுப்பு நிற காய்களுடனும், மேக்னஸ் கார்ல்சன் வெள்ளை நிற காய்களுடனும் ஆட்டத்தை தொடங்கினர். போட்டியானது 30 நகர்வுகளுக்கு பின்டிராவில் முடிவடைந்தது. இதனால் செஸ் உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி டை பிரேக்கருக்கு சென்றுள்ளது

நாளை நடைபெறும் டை பிரேக்கர் மூலம், மகுடம் சூடப்போவது பிரக்ஞானந்தாவா? கார்ல்சனா? என்பது தெரிய வரும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com