மேக்னஸ் கார்ல்சன் - பிரக்ஞானந்தா
மேக்னஸ் கார்ல்சன் - பிரக்ஞானந்தா

உலகக் கோப்பை செஸ்: போராடித் தோற்ற பிரக்ஞானந்தா!

உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார்.

உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டி டிராவில் முடிந்த நிலையில், இன்று டை பிரேக்கர் முறையில் போட்டி நடைபெற்றது. வெள்ளை நிற காயங்களுடன் ஆட்டத்தை துவக்கிய பிரக்ஞானந்தா கவனமாக விளையாடினார். இருப்பினும் முதல் சுற்றில் கார்ல்சன் வெற்றி பெற்றார். இதையடுத்து, நடந்த 2வது சுற்று 'டிரா' ஆனது. இதனால் டை பிரேக்கரில் 1-0 என்ற கணக்கில் கார்ல்சன் வெற்றி பெற்றார்.

உலகளவில் 2, 3 ஆம் நிலை வீரர்களை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா, முதல் நிலை வீரரான கார்ல்சனிடம் தோல்வியடைந்தார்.

செஸ் உலகக்கோப்பையை வென்ற கார்ல்சனுக்கு ரூ.91 லட்சம், 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு ரூ. 67 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com