கிழிந்த கால் மூட்டு தசை நார்... தாண்டி வந்து சாதித்த யஸ்திகா பாட்டியா!

Yastika Bhatia
யஸ்திகா பாட்டியா
Published on

இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்த முதல் பெண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இந்திய மகளிர் அணியின் விக்கெட் கீப்பர் யஸ்திகா பாட்டியா.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரண்டாம் இன்னிங்ஸில் இச்சாதனையைப் புரிந்தார். கடந்த ஆண்டு அவருக்கு கால்மூட்டில் தசை நார் கிழிந்து( ACL tear), மீண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் மகளிர் டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில், இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸில் விளையாடியது.

இதில் விளையாடிய யஸ்திகா பாட்டியா 145 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் சதத்தை எட்டினார்.

இந்த சாதனையால், பல்வேறு பட்டியலில் இவரின் பெயர் இடம்பெற்றுள்ளது.

மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3ஆவது அல்லது 4ஆவது இன்னிங்ஸ் ஆடும்போது இந்திய வீராங்கனை ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் இதுவேவாகும்.

இதற்கு முன்னர் 1985ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக சந்தியா அகர்வால் 98 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

மேலும், லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த இந்திய இடது கை பேட்டர்களின் பட்டியலில் சவுரவ் கங்குலிக்கு அடுத்து 2ஆவது இடத்தை யஸ்திகா பிடித்துள்ளார்.

லார்ட்ஸ் மைதானத்தின் கௌரவப் பலகையில் இடம் பிடித்துள்ள யஸ்திகா பாட்டியா, இறுதியில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com