விளையாட்டு
ஆஸ்திரேலியப் பயணத்துக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு நாள் போட்டிகள், டி 20 போட்டிகளுக்கான அணித் தலைவராக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். துணைத்தலைவராக ஸ்ரேயாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ள பட்டியலின்படி, மூன்று ஒரு நாள் போட்டிகளும் ஐந்து டி20 போட்டிகளும் நடைபெறவுள்ளன.
முதலில் ஒரு நாள் போட்டிகள் தொடர் தொடங்குகிறது. இப்போட்டி வரும் 19ஆம் தேதி பெர்த் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.